Saturday, July 16, 2011

2

அமரர் திரு ஆறுமுகத்திற்கான நினைவுக் கவிதை (காணொளி)

  • Saturday, July 16, 2011
  • சுதா (admin)
  • Share

  • அப்பப்பாவை
    பாட்டுத் தலைவனாய்
    பாடு என்றால்
    கையில் வந்த பேனா
    வஞ்சகமாய் எனைப் பார்க்கிறது

    எதை எழுத
    எப்படி எழுத

    அவர் வாழ்ந்த அவனியில்
    நான் வாழ்ந்த கதை மட்டுமே
    எழுது கோல் அறியும்.

    கற்பனையில் புனைவாயோ என
    காகிதம் எனை கேலி செய்கிறது
    கடுப்பான மனசு
    மிடுக்கோடு தாளைக் கற்பழிக்கிறது.

    ஊர் வலம் வருவோமென
    வெடுக்கென்று பறக்கிறேன்.
    நான் கண்ட மனிதரெல்லாம்
    ”ஆறுமுகத்துக்கா !!!!! .... ”
    நம்ப மறுத்து நிற்க
    அவர் சொன்ன வார்த்தைகள்
    என் தாளில் வரிகளாய்
    மிஞ்சி நிற்கிறது.

    ”எந்த விழா என்றாலும்
    சொந்த விழா போல நிற்பாராம்
    வந்தவர் வாயடைத்து நிற்க
    முந்தி நின்று முதுகு வளைவாராம்”

    ”அடக்கமான மனிதனாம்
    தடுக்கில் கூட வாழ்வாராம்”

    ”இக் கோமகன்
    குருக்களாய் ஜனிக்காதவன்
    குருக்களையே மிஞ்சியவனாம்”

    எம் ஊர் இவரைப் பெற
    என்ன தவம் செய்ததுவோ

    ஐயா,
    நீர் வாழ்ந்த நிலமாதலாலோ
    நீர் குறையின்றி நாம் வாழ்கிறோம்.
    எவ்வுலகு நீர் போனாலும்
    அவ்வுலகு தழைத்தோங்கும் ஐயா.

    உம் ஜீவாத்மா சாந்திக்காய்
    பேரனிவன் புசத்திய வரிகளை
    பூச்சரமாய் சூட்டுகிறேன்.


    2 Responses to “அமரர் திரு ஆறுமுகத்திற்கான நினைவுக் கவிதை (காணொளி)”

    அன்பு நண்பன் said...
    July 18, 2011 at 7:37 AM This comment has been removed by the author.

    அன்பு நண்பன் said...
    July 18, 2011 at 7:38 AM

    குறைந்த மட்டுப்படுத்தபட்ட தொழில் நுட்பத்திலும் முயற்சிக்கு வாழ்த்துக்கள் bro..


    Post a Comment

    Related Posts Plugin for WordPress, Blogger...

    Subscribe