Saturday, July 16, 2011

1

பேர்த்தியின் கிறுக்கல்கள் (திரு ஆறுமுகத்திற்கான நினைவுக் கவிதை).

  • Saturday, July 16, 2011
  • சித்தாரா மகேஷ்.
  • Share
  • பேர்த்தியின் கிறுக்கல்கள்


    அப்பப்பா என்ற சொல்லுக்கு அர்த்தமும் நீயே
    உனக்காய் கவி எழுத பேர்த்தி இவளும் வந்தேன்
    சிறு பிள்ளையும் ஏதோ கிறுக்கியது உனக்காய்.

    கற்பனையில் வரைவதானால்
    ஓர் நொடியில் கிறுக்கிய மனம்
    காவியமான உன்னை கவியிலே வரைய
    நினைத்தால் எப்படி வரையலாம்

    உன்னை கவியாக்கி வரையவா ?
    இல்லை கவியிலே உன்னை ஆக்கி வரையவா ?

    அடிக்கடி கேட்பேன் அம்மாவிடம்
    நம் உறவுகளை
    நம் ஊரவர் மீது ஏனோ
    எனக்கிருந்த தனி நேசமோ....!!!!!

    அவள் அதிகமாய் சொல்வதெல்லாம்
    அப்பப்பாவே உன் கதையே
    எப்போதும் அருகிலே இருந்த மாமன் என்றதனால்
    அவளுக்கு உன்மேல் அதிக பாசமோ,,,!!!

    சுளுக்குப் பார்க்க வந்தோரின்
    சுளுக்கையெல்லாம் நாசுக்குவதும்
    எந்த விழாவெண்டாலும்
    முன்னின்று நடத்தி மகிழ்வதும்
    உனக்கு கைவந்த கலையாமே

    முகத்தில் தெரியுதங்கே
    உந்தன் சாந்த குணமும்
    தெய்வீக களையும்.

    பேருக்கேற்றால் போல் ஆறுமுகம் காட்டாது.
    எல்லோரிடத்திலும்
    ஓர் முகமாய்
    பழகும் நீ வாழ்ந்த மண்ணில்
    நாமும் வளர்ந்திட என்ன தவம் செய்தோம் அப்பப்பா.

    அப்பப்பா நீ 
    எம்மைவிட்டு சென்றது தப்பப்பா
    எப்பப்பா எம் குறை தீர்க்க வருவாயப்பா 
    காத்திருக்கிறோம் நம்பிக்கையுடன் 
    ஓர் மழலையாய் மீண்டும் நம் உறவாய்
    நீ வருவாய் என.......

    1 Responses to “பேர்த்தியின் கிறுக்கல்கள் (திரு ஆறுமுகத்திற்கான நினைவுக் கவிதை).”

    மு.லிங்கம் said...
    July 16, 2011 at 3:37 PM

    பாசத்தின் வெளிப்பாடு,
    இழப்பின் மனக்குமுறல், உங்களால் அமைக்கப்பட்ட இந்த கவியின் ஒவ்வொரு வரிகளும் ஜயாவின் வாழ்க்கை வரலாற்றை கண்முண் கொண்டுவந்து நிறுத்துகின்றன.
    ஜயாவின் ஆத்மா சாந்தியிற்காக இறைவனை பிரார்த்திக்கும் அதேவேளை, உங்கள் இந்த கவியின் உருவாக்கத்திற்காக எனது பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.


    Post a Comment

    Related Posts Plugin for WordPress, Blogger...

    Subscribe