Tuesday, August 9, 2011

2

கற்பகவிநாயகர் துணை!!!

  • Tuesday, August 9, 2011
  • மு.லிங்கம்
  • Share
  • அனைத்து உறவுகளிற்கும் வணக்கம்,


     
    சில காலமாக மக்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்திய "கற்பகத்தான்" முகநூல் பற்றிய தெளிவை எமது உறவுகளிற்கு ஏற்படுத்த வேண்டிய சந்தர்ப்பம் இன்றுதான் அதிகாரபூர்வமாக எங்களிற்கு கிடைத்துள்ளது.
    இலக்கணாவத்தை மக்களை அதிகாரபூர்வமாக பிரதிநிதித்துவப் படுத்தும் அமைப்புகள் இரண்டு தான் அதாவது "எங்க ஊர் இலக்கணாவத்தை" http://www.facebook.com/?ref=home#!/groups/mainthan/முகநூல் குழுமம்,  மற்றது "கற்பகத்தான்" http://katpahaththaan.blogspot.com/2011/08/07082011.htmlஇணையத்தளம்.
    அப்படியென்றால் "கற்பகத்தான்" முகநூல் ஏன் ஆரம்பிக்கப்பட்டது?  என்ற சந்தேகம் அதாவது ஊர் இரண்டாக பிரிந்து விட்டது போன்ற ஒரு மாயை அல்லது வதந்தி எமது மக்கள் மத்தியில் பரவ ஆரம்பித்திருந்தது.   இது யாராலும் திட்டமிட்டு செய்யப்பட்ட செயல் அல்ல என்பதை எங்களால் உறுதிப்படுத்த முடிந்தது.



    எங்களது செயல்பாடுகளை அனுபவரீதியாக நன்மையடைந்து கொண்டிருக்கும் எமதூர் உறவுகளை இப்படிப்பட்ட வதந்திகள் மிகவும் பாதிப்பை கொடுத்ததினால்,  இதுபற்றிய தெளிவை புலம்பெயர்ந்த மக்களிற்கு வழங்கவேண்டும் என்ற கட்டாயத்தை உணர்ந்து தீவிர செயலில் இறங்கினார்கள்.

    இதன் வெளிப்பாடாக எமதூரின் நன்மை,  தீமைகளில் அதிக அக்கறை கொண்டவரும்,  "இலக்கணாவத்தை கற்பக விநாயகர்" ஆலய நிர்வாக சபையின் முக்கியத்துவருமான சகோதரன் வைகுந்தன் அவர்கள் இரு கட்டமாக சந்திப்பை எங்களுடன் ஏற்படுத்தினார்.
    முதல்கட்டமாக "கற்பகத்தான்"  இணையத்தள நிர்வாகத்தினருடன் நேரடியான சந்திப்பையும்,  " எங்க ஊர் இலக்கணாவத்தை" முகநூல் குழுமம் சார்பில் என்னுடன் தொலைபேசியிலும் நீண்டதொரு கலந்தாலோசனையில் ஈடுபட்டிருந்தார். 


     
    இந்த சந்திப்பில் முக்கியமாக முகநூல் குழுமத்தில் விவாதிக்கப்பட்ட சந்தேகங்களைப் பற்றி திறந்த மனத்துடன் பேசினோம்.
    இதில் "அறிவகம் நூலகம்" புனரமைப்பு,  "கற்பகத்தான் சித்திரத்தேர் அமைத்தல்,  தேர்த்திருவிழாவை பொதுத் திருவிழாவாக நிர்ணயித்தல், எங்கவூரில் இளைஞர்களின் நடவடிக்கைகள்,  அவர்களின் தேவைகள், ஊரவர்களின் சொத்துக்கள் பற்றிய கரிசனை இப்படி பல விடயங்கள் பற்றி இரண்டு மணித்தியாலங்களிற்கு மேல் பேசினோம்.
    இந்த தொலைபேசி சந்திப்பு எங்களிற்கு மிகவும் தெளிவையும், சந்தோஷத்தையும், உற்சாகத்தையும் கொடுத்திருக்கிறது.
    நாங்கள் ஊருக்காக என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று எதிர்பார்க்கின்றமோ அவரின் சிந்தனையும் அதேமாதிரியுள்ளது என்பதை அறிந்தபோது மிகவும் ஆச்சரியத்தை கொடுத்தது.

    முக்கியமாக சித்திரத்தேர் கட்டும் விடயம்பற்றி நிறையவே பேசினோம், நூலகம் சீர்திருத்தம் செய்யும் விடயம் பற்றிய விடயத்தில் நான் உறுதியாகவே இருந்தேன், இதற்கு தனது பூரன விருப்பத்தையும். ஆர்வத்தையும் தெரிவித்தார்.
    "கற்பகத்தான்" முகநூல் சித்திரத்தேர் கட்டும் திருப்பணி சம்பந்தமாகவே ஆரம்பிக்கப்பட்டது.
    {இந்த திருப்பணிசபையில் பொருளாளராக எங்களால் மதிக்கப்படும் கந்தசாமி மாமா அவர்களே இருப்பதாக தெரிவித்தார்.}

    அப்படியென்றால் எங்களுடன் இதுபற்றி ஏன் கலந்தாலோசிக்கவில்லை
    என்ற எனது கேள்விக்கு அவரால் கொடுக்கப்பட்ட பதில் எனக்கு மிகவும் வருத்தத்தை கொடுத்தது ஏனெனில் இடையில் தான் பெரியதொரு தப்பு நிகழ்ந்துள்ளதே தவிர இதில் வேறெந்த உள்நோக்கமுமில்லை என்பதை என்னால் உறுதிப்படுத்த முடிந்தது.
    நாங்கள் எங்களது ஊரை பலவழிகளிலும் முன்னேற்றவேண்டும் என்றே முயற்சிக்கின்றோம்.
    அவர்களும் அதாவது ஊரில் வசிப்பவர்களும் அதையே விரும்புகின்றார்கள்.
    எங்களிடம் " எங்க ஊர் இலக்கணாவத்தை" , " கற்பகத்தான் " இணையத்தளம் போன்ற அமைப்பிடம் நிறையவே சுமைகளை சுமத்தியுள்ளார்கள்.
    முக்கியமாக தேர் கட்டும் விடயம் உட்பட அனைத்து விடயங்களும்.
    இறுதியாகவும், உறுதியாகவும் ஒன்று மட்டுமே புரிகிறது இலக்கணாவத்தையில் எந்த விதமான பிரிவும் இல்லை, குழப்பமும் இல்லை.
    இந்த சந்திப்பிற்கு பின்பு எங்களது செயல்பாட்டில் நிறையவே மாற்றங்களும், தீவிரமாக செயல்பட வேண்டிய தேவையும் இருப்பதாக நான் உணருகின்றேன்.
    எது எப்படியாயினும் உறவுகளாகிய உங்களது தீர்ப்பே எங்களது முடிவு என்பதை மீண்டும் நினைவு படுத்துகின்றோம்.
    எங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்துங்கள், நாங்களும் உங்களுடன் தனிப்பட்ட முறையில் தொடர்புகளை ஏற்படுத்தவுள்ளோம்.
    இணைவோம்  உறவுகளாய் உறவுகளுக்காக.

    நன்றி,
    மு.லிங்கம்.
    09.08.2011

    2 Responses to “கற்பகவிநாயகர் துணை!!!”

    அன்பு நண்பன் said...
    August 9, 2011 at 8:22 PM

    நேரத்தையும், காலத்தின் தேவைக்கும் ஏற்ற முயற்ச்சி, வாழ்த்து சொல்லி என்னை நான் பிரித்து வைக்க விரும்பவில்லை. அனுபவம் உள்ளவர்களின் முயற்ச்சிக்கும், கருத்துக்கும் மதிப்பளித்து இளம் சமுதாயம் இணைத்து செயற்படுவதையே நான் விரும்புகின்றேன். நம் வீடு இது எனவே நாம் ஒவ்வொருவரும் நாமாக முன்வந்து நம் எண்ணம், கருத்தை உறவுகளோடு உரிமையோடும் , உணர்வோடும் பகிர்ந்த ஆரோக்கியமான முடிவுகளை எட்டவும், ஊரின் வளர்ச்சியை ஆரோக்கியமாக்கவும் வழியமைப்போம்....


    குகரூபன் said...
    August 9, 2011 at 10:27 PM

    முயற்சி திருவினை ஆக்கும்


    Post a Comment

    Related Posts Plugin for WordPress, Blogger...

    Subscribe