Tuesday, August 9, 2011

3

திருப்பணி சபையுடனான கலந்துரையாடலும் திருப்தியான தீர்மானங்களும்.

 • Tuesday, August 9, 2011
 • சுதா (admin)
 • Share
 • வணக்கம் உறவுகளே…
          இதுவரை காலமும் பெரிய இழுபறிகளுடன் கூச்சலும் குழப்பமும் ஆகா இருந்த ஒரு பெரும் விடயத்திற்கு சுமூகமான தீர்வுகள் எட்டப்பட்டுள்ளது.
  “ஆம்“
           இலக்கணாவத்தை என்ற கிராமத்தின் மேல் இருந்த பல சந்தேகப்பார்வைகளுக்கு ஒரு சில நாளில் பெரும் தீர்வுகள் ஏற்கனவே எட்டப்பட்டிருந்தது அனைவரும் அறிந்த விடயமேயாகும்.
  இந்த உலகத்தில் வாழும் அனைத்து ஊர் மக்களையும் ஒற்றைக் குடையின் கீழ் கொண்டு வந்த திரு மு. லிங்கத்தின் முயற்சியில் கட்டுக்கோப்பாகக் காக்கப்படும் “எங்கள் ஊர் இலக்கணாவத்தை“ என்ற மூஞ்சிப்புத்தகக் குழுமத்தின் உத்தியோகபூர்வத் தன்மை உறதிப்படுத்தப்பட்டதுடன் அதன் நோக்கமான உறவுப்பாலம் என்ற ஸ்தானத்தை தக்க வைத்தும் கொண்டது. அதே போல் ஊரின் செய்தித் தளமாக இயங்கிய “கற்பகத்தான்“ தளமும் தனது வாசகத்தை நிலைப்படுத்திக் கொண்டது.
          அது மட்டுமல்லாமல் ஆலயத்தில் தோற்றுவிக்கப்பட்டுள்ள தேர்த் திருப்பணி சபையும் அதனால் உருவாக்கப்பட்ட கற்பகத்தான் இலக்கணாவத்தை என்ற மூஞ்சிப்புத்தகம் ஒரு குழப்பமாகவே இருந்தது. காரணம் அவ் நிர்வாகமானது கை கோர்த்தியங்கும் எமது இணையக் குழுமத்துடன் இதுவரை தொடர்பு கொள்ளாமல் இருந்ததே இந்தளவு குழப்ப நிலமைக்கும் காரணமாக இருந்தது. இவையனைத்தும். ஒற்றை நாளில் நிவர்த்தி செய்யப்பட்டது அதிசயமான விடயமே.
  தேர்த் திருவிழா உறப்பினர்களில் ஒருவரான வைகுந்தண்ணா அவர்கள் தொடர்பு கொண்ட போது தான் எமது நிலைப்பாட்டை தெளிவாக விளக்க முடிந்ததுடன். அவர்களது வெளிப்பாட்டையும் மனம் விட்டுப் பகிரக் கூடியதாக இருந்தது. எமது குழுமச் செயற்பாடுகள் பற்றி விளக்கமாகவும் நேரடியாகவும் கலந்துரையாடினேன்.
           ஒவ்வொரு வார்த்தைப் பகிர்விலும் நான் ஒரு செய்திப்பரிமாற்றக் கருவியாகவும் நடுநிலமையையும் கருத்திற்கொண்டே அளவளாவிக் கொண்டேன். அதில் திருப்பணி சபை சம்பந்தமானது பத்து வீதத்திற்கும் குறைவாகவே இருந்தது. ஊரின் மற்றைய முக்கிய தேவைகள் பற்றியே அதிகளவு கதைக்கப்பட்டது. நானும் வழமை போல கல்வியின் தேவையைப் பற்றியே அதிகம் வலியுறுத்தினேன். கல்விச் சமூகத்தை ஒருங்கிணைப்பது சம்பந்தமாக நல்ல திட்டமிடலையும் உருவாக்கிக் கொண்டோம்.
          மிக முக்கியமான விடயமான ஒன்றைப் பகிர்வதுடன் இந்த பதிவை நிறைவுக்கு கொண்டு வருகிறேன். அந்தக் கலந்துரையாடலின் முக்கிய கட்டம் இது தான். “தேர் என்பது ஊரின் தேவை அது எமக்கான தேவையல்ல ஊரின் நலன் கருதி தேர்த் திருவிழாவை பொதுத் திருவிழாவாக்க தான் சம்மதம்” தருவதாக உறுதியாக தெரிவித்து விடை பெற்றார். இந்தப் பதிலானது குழுமத்தில் கேட்கப்பட்ட கேள்விக்குத் தெளிவான பதில் அளித்தது எனக் கருதியதால் அவரிடம் மேலதிகமாக எதையும் பெற வேண்டிய தேவையிருக்கவில்லை.


         எமது வீட்டில் ஒரு மணித்தியாலத்திற்க மேல் அவருடன் அளவளாவ முடிந்தது இருவருக்கும் மிகவும் சந்தோசமாகவும் மனத் திருப்தியாகவும் இருந்தது. இது சம்பந்தமாக உறவுகளை ஒரு தீர்மானத்திற்கு வருமாறு கற்பகத்தான் செய்தித் தளத்தின் சார்பாக நேரடியாக வலியுறுத்துகின்றேன்..
  நன்றிச் செதுக்கலுடன்..
  அன்புச் சகோதரன்..
  ம.தி.சுதா

  3 Responses to “திருப்பணி சபையுடனான கலந்துரையாடலும் திருப்தியான தீர்மானங்களும்.”

  RUBAN said...
  August 9, 2011 at 10:27 PM

  முயற்சி திருவினை ஆக்கும் ....


  அன்பு நண்பன் said...
  August 10, 2011 at 7:21 AM

  முயற்சி செய்தால் முடியாதது எதுவுமில்லை, அனுபவம் சிறந்த பாடம்..


  சித்தாரா மகேஷ். said...
  August 10, 2011 at 7:58 AM

  ஒற்றுமையே பலம்.நல்லது நடந்தால் யாவர்க்கும் சந்தோசமே.


  Post a Comment

  Related Posts Plugin for WordPress, Blogger...

  Subscribe