Tuesday, September 20, 2011

3

கனடாவில் இனிதே நிறைவேறிய ஒன்றுகூடல் 2011!!!

  • Tuesday, September 20, 2011
  • மு.லிங்கம்
  • Share
  • எல்லோருக்கும் வணக்கமெங்க!!!

    பல எதிர்பார்ப்புக்கள்,   வதந்திகள்,  வாந்திகள், சந்தேகங்கள் எல்லாம் படை சூழ்ந்திருக்க, சுகந்தன் பிறை, திவாகரன் போன்றோரின் அட்டகாசங்கள் மறுபுறமிருக்க "கற்பகத்தான்" தேர்த்திருப்பணி,   "கலைவிழா2012"  கனடா, "இலக்கணாவத்தை மக்கள் ஒன்றியம்" கனடா புதிய நிர்வாகம் தெரிதல்,  போன்ற நிகழ்ச்சி நிரல்கள் பற்றிய விடயங்கள் ஒருபுறம் தலைதூக்கிக் கொண்டிருக்க, எப்படியோ ஒன்றுகூடல் நடத்தியே ஆகனும் என்ற கனடிய உறவுகள் பிடிவாதம் பிடித்துக்கொண்டிருந்த சூழ்நிலையில்  இந்த ஒன்றுகூடல் 18ந் திகதி 2011 ஞாயிற்றுக்கிழமை  நிறைவேறியிருக்கின்றது.

    கடந்தமுறை இடம்பெற்ற நிகழ்விற்கும் இந்த தடவை இடம்பெற்ற நிகழ்விற்கும் இடையில் நிறையவே ஏற்றத் தாழ்வுகள் உள்ளன.
    முதலில் ஏற்றத்தைப்பற்றி கவனிப்போமாயின், இந்த தடவை இடம்பெற்ற
    நிகழ்வின் ஏற்பாடுகள் அனைத்தும் மக்களினாலையே செய்யப்பட்டிருந்தன.

    இந்நிகழ்வின்போது பல வழிகளில் மக்களினாலையே நிதிகள் வழங்கப்பட்டன.
    முதலாவதாக அன்று ஏற்பட்ட உணவு செலவிற்காக பிரத்தியேகமாக பலர் முன்வந்து பணம் வழங்கியிருந்தனர்.  இதனால் கிடைக்கப்பட்ட பணத்தின் மூலம் உணவிற்காக செலவழிந்த பணம் தீர்க்கப்பட்ட பின்பு மிகுதியாகவும் கணக்கில் உள்ளன.
    இரண்டாவதாக இதுவரை உறுப்பினராக இணையாதவர்கள் தாமாகவே முன்வந்து சேர்ந்ததினாலும் பணம் கணக்கில் வந்து சேர்ந்துள்ளன.
    மூன்றாவதாக அதிஷ்ரலாபச் சீட்டு விற்பனை மூலமும் கணக்கில் நிதி சேர்ந்துள்ளன என்பது குறிப்பிடத் தக்கதாகும். 
    நான்காவதாக இந்த தடவை இடம்பெற்ற நிகழ்வின்போது 85%  வீதமான நேரம் மக்களின் கலந்துரையாடலுக்கே வழங்கப்பட்டிருந்தன.
    இந்த கலந்துரையாடலின்போது அனைத்து விடயங்களிலும் மக்கள் ஒரே கருத்துக்களை வழங்கியதுடன், ஒரே நோக்கங்கொண்டு வாழ்வதையும் புரியக்கூடியதாக இருந்தது.
    மக்களினால் கேட்கப்பட்ட ஒவ்வொரு கேள்வியிற்கும், சந்தேகங்களிற்கும் சிவராசண்ணா என்னுடன் ஒத்தாசையாக இருந்து பதில்களை வழங்கியதுடன் மக்களை ஏற்றுக்கொள்ளவும் வைத்தார்.

    முக்கியமாக "தேர்த்திருப்பணி" சார்பாக எங்களால் குழுமத்தில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பு சார்பாக என்னால் விளக்கங்கள் கொடுக்கப்பட்டு அதனால் ஏற்பட்ட பாதக, சாதகங்கள் பற்றி தெளிவுபடுத்தினேன்.

    வைகுந்தனுடன் நான் பேசிய விடயங்கள் பற்றி கூறினேன்,  இதில் நானும் வைகுந்தனும்,  சுதாவும் இப்போதும் தெளிவாகவே இருக்கின்றோம் என்றும் இடையில் உள்ள இருவரினால் தான் முகநூலில் உள்ள விடயங்களை வைகுந்தனுக்கு தப்பான முறையில் விளக்கங்கள் கொடுக்கப்பட்டன என்ற கருத்துப்பட தெளிவு படுத்தினேன்.
    இதன் காரனத்தினால் தான் இந்த ஒன்றுகூடலில் "தேர்த்திருப்பணி " விடயத்தை முன்னிலைப் படுத்தவேண்டாம் என்று வைகுந்தன் கூறினார்.



    புதிய தேர் கட்டவேண்டும் என்று சொல்ல அல்லது தீர்மானிக்க மக்களிற்கு எவ்வளவு உரிமை இருக்கின்றதோ அதே உரிமைதானே தேர்த்திருவிழாவை ஏன்  பொதுத்திருவிழா ஆக்கக் கூடாது என்று கேட்க உரிமை உள்ளது என்ற கருத்துக் கொண்டவர்களின் விவாதத்தை முன்வைத்தேன்.
    இந்த விடயத்திலும் எங்களால் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பில் மக்கள் எதற்கு சார்பாக அதிகமாக வாக்களித்தார்களோ அதே கருத்தையே தெளிவு படுத்தினார்கள், ஒத்த கருத்துடன் ஏற்றுக் கொண்டார்கள்.

    அதாவது வைகுந்தன் எங்களுக்கு கூறியதுபோன்று தேர்கட்டும் விடயத்திற்கு பொதுத்திருவிழா என்ற விடயம் இடையூறாக இருக்ககூடாது,  இருக்கமாட்டாது  தேரை முதலில் உருவாக்குவோம் அப்புறமாக பேசி முடிவெடுப்போம் என்பதாகும்.


    இதை மிகவும் தெளிவாகவே சிவராசண்ணா விளக்கமளித்திருந்தார். இதையே வைகுந்தனும் எங்களிற்கு கூறியிருந்தார்,  இதையே மக்களிற்கு நாங்களும் கூறியிருந்தோம்.
    சரியாகவே தமிழ் வாசிக்க தெரியாமலோ அல்லது வாசிக்க தெரிந்தும் எங்கள் நோக்கங்களை புரிந்து கொள்ளத் தெரியாமலோ சிலர் இலவசமான தொலைபேசியென்றவுடன் அட்டகாசத்தில் இறங்கியிருந்தனர்.
    நான் ஊடகத்தில் ஓரளவு நாட்டமுள்ளவன், ஊரில் உண்மையான பற்றுள்ளவன் என்ற காரனத்தினால் இவர்களின் அறிவை புரிந்து கொண்டபடியினால் ததம்பாமல் எனது கொள்கையில் இறுக்கமாகவும் நிதானமாகவும் எனது செயலில் மட்டுமே கண்ணும் கருத்துமாக இருந்து இந்த ஒன்றுகூடல் நிகழ்வில் சாதித்துள்ளேன்.
    எங்களது ஒன்றுகூடல் தீர்மானத்தின்படி "தேர்த்திருப்பணி" சார்பாக "இலக்கணாவத்தை மக்கள் ஒன்றியம்"  நிர்வாகம் நிதிசேர்ப்பில் ஈடுபடாது அதாவது மக்கள் அனைவரினதும் வேண்டுகோளின்படி ஈடுபடக்கூடாது என்ற கண்டிப்பான தீர்மானமாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

    இருப்பினும் தேர்கட்டும் விடயத்தில் அனைத்து தரப்பினரும் மிகவும் ஆர்வமாகவும், அக்கறையாகவும், எதிர்பார்ப்புடனுமே இருக்கின்றார்கள் என்பதையும் நான் உறுதிப் படுத்துகின்றேன்.



    அடுத்து "அறிவகம்" நூலகம் சம்பந்தமான விடயங்கள் கருத்தாடலுக்கு எடுக்கப்பட்டபோது, அதை புனரமைத்து செயல்படுத்துவதிற்கு சில இளைஞர்கள் என்னிடம் தெரிவித்ததை கூறினேன்.
    அதன்போதும் எல்லோரும் மிகவும்  ஆர்வமான முறையில் தங்களது கருத்துக்களை முன்வைத்தனர்.

    உதவிசெய்ய முன்வருவோரை உள்வாங்காமல் ஏன் புறந்தள்ளினாய் என்ற கருத்துப்பட என்னை நோக்கி கேள்விகள் வந்தன.
    இதன்போது பல பாதக, சாதக விடயங்களை தெளிவு படுத்தினேன், எனது திட்டத்தையும் முன்வைத்தேன். அதாவது இந்த நூலக மூலமாக அறிவு சம்பந்தமான விடயங்கள் பல செய்யலாம் என்று தெளிவு படுத்தினேன்.
    அத்துடன் அறிவகம் நிர்வாகிகளில் ஒருவரான அற்புதராசாவினால் எனக்கு தெளிவுபடுத்தப்பட்ட சில விடயங்களை மனதில் நிறுத்தி சில விடயங்களை தெளிவு படுத்தினேன். இந்த விடயத்தில் சதாவை இணைப்பாளராக வைத்து செயல்படலாம் என்ற ஆலோசனையை சிலர் முன்வைத்திருந்தனர் இருந்தும் அதற்கென்றவொரு நிர்வாகம் இருக்கின்றபோது அவர்களுடன் முதலில் தொடர்பை ஏற்படுத்திய பின்பே எந்தவொரு முடிவையும் எடுக்கலாம் என்ற தீர்மானத்திற்கு வந்தோம்.

    இலங்கையின் சூழ்நிலைப்படி நூலக மூலமே எமதூர் சார்பாகவும், மக்கள் சார்பாகவும் அரசாங்கத்துடன் தொடர்புகளை ஏற்படுத்தமுடியும், இதனால் மக்களிற்கு சில வசதிகளையும் பெற்றுக்கொடுக்க முடியும் என்பதையும் தெளிவு படுத்தினேன்.

    கலந்தரையாடலின் இறுதியில் அறிவகம் நூலக நிர்வாகத்தினருடன் தொடர்பை ஏற்படுத்தி இதை இயங்க வைக்கும் முயற்சியில் இறங்குமாறு என்னை சகலரும் பணித்துள்ளனர்.

    இந்த விடயத்திலும் எங்களது ஒன்றியம் தலையிடாது வேறுவிதமாக செயல்படலாம் என்ற எனது ஆலோசனையை அனைத்து தரப்பினராலும் நிராகரிக்கப்பட்டு இது "இலக்கணாவத்தை மக்கள் ஒன்றியம்" அதிகாரபூர்வமாக பொறுப்பேற்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.

    இறுதியாக கலைவிழா 2012 நடத்துவது பற்றிய எனது திட்டத்தை அனைத்து தரப்பினராலும் எற்றுக்கொள்ளப்பட்டு தங்களது ஆதரவுகளையும் தெரிவித்தனர்.

    எமதூர் சார்பாகவும், மக்கள் சார்பாகவும் மீண்டும் என்னிடம் ஒப்படைக்கப் பட்ட பொறுப்புக்களை பொறுப்பாக நிறைவேற்ற முயற்சிக்கின்றேன் என்ற நம்பிக்கையை அனைத்துத் தரப்பினருக்கும் தெரிவித்தக்கொண்டு தற்காலிகமாக விடைபெறுகின்றேன்.
    தொடரும்.....

    நன்றி,
    மு.லிங்கம்.







    3 Responses to “கனடாவில் இனிதே நிறைவேறிய ஒன்றுகூடல் 2011!!!”

    அன்பு நண்பன் said...
    September 20, 2011 at 7:48 AM

    நிகழ்வுகளின் கருத்துகளை பதிவு செய்தமைக்கு lingam அண்ணாவிற்கு நன்றிகள்...


    மு.லிங்கம் said...
    September 20, 2011 at 10:38 AM

    நன்றி அன்பு நண்பன் அவர்களே!


    கரவைக்குரல் said...
    September 20, 2011 at 6:01 PM

    எமது ஊர் சார்பான பல்வேறு விடயங்களையும் தொட்டிருக்கிறீர்கள். நூலகம் சார்ந்து பணிகளை மேற்கொள்ளலாம் என்ற கருத்து வரவேற்கப்படக்கூடிய ஒன்றாகும்,
    நூல்களை சேகரித்து இலக்கணாவத்தை நூலகம் அறிவகம் என்பதற்கு பறை சாற்றும் வண்ணம் அதன் பணிகள் அமையட்டும் வாழ்த்துக்கள்,அத்தோடு என்பணியும் ஆதரவும் எப்போதும் ஆக்கபூர்வமான பணிகளுக்கு இருக்கும்,


    Post a Comment

    Related Posts Plugin for WordPress, Blogger...

    Subscribe