Monday, November 7, 2011

0

தேர்க் கொட்டகைக்கான அடிப்போடல் நிகழ்வு (07.11.2011)

  • Monday, November 7, 2011
  • சுதா (admin)
  • Share
  • வணக்கம் உறவுகளே
         எமது ஆலயத்தின் தேர்த்திருப்பணியின் முக்கியகட்டங்களில் ஒன்றான தேர்த்திருப்பணி தொடர்பான படிகளில் இன்று கொட்டகைக்கான அடிப்போடல் நிகழ்வு இடம்பெற்றது.
       இந்நிகழ்வானது காலை 7 மணியளவில் இடம்பெற்றிருந்தது. இது சம்பந்தமான கலந்துரையாடலை மேற்கொண்டிருந்த திரு வைகுந்தநேசன் அவர்களிடம் இருந்து சில உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களையும் பெற முடிந்தது.
        இக்கொட்டகைக்காக எமது ஆலய முன்றலில் இருந்த அரசமரத்தை இழக்க வேண்டி வருமோ என்ற அச்சம் பலருக்கு எட்பட்டிருந்தது. இது சம்பந்தமாக அவரிடம் நேரடியாகக் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையில் ”இயன்றவரை எமது சூழலின் வளத்தை பேணவே முயற்சிப்பதாகத் தெரிவித்ததுடன் இத பற்றி அஞ்சத் தேவையில்லை எனவும் அம் மரத்தின் கிழக்கே போகும் இரு கிளைகளை மட்டுமே அகற்ற வேண்டும் எனவும் தெரிவித்தார்.
        இந்த அடிப்போடல் நிகழ்வானது திரு வி . கந்தசாமி தம்பதிகளால் மிகவும் மங்களகரமாகவும் சிறப்பாகவும் ஆரம்பித்து வைக்கப்பட ஊரின் முக்கிய பிரமுகர்களும் அடிப்போட்டார்கள்.
       நிகழ்வு சிறப்பாக நிறைவுக்கு வந்ததுடன் ஒரு சில நாளில் ஏனைய வேலைகளும் ஆரம்பிக்கப்படும் எனவும் உத்தியோகபூர்வமாகத் தெரிவிக்கப்பட்டது.

    குறிப்பு - கைப்பேசியில் பெறப்பட்ட படங்களாகையால் அதன் தெளிவுத் தன்மையை உறுதிப்படுத்த முடியவில்லை.
    தேர்த்திருப்பணி சம்பந்தமான மேலதிக பதிவுகளை காண மேலே உள்ள தேர்த்திருப்பணி என்ற தலைப்பைச் சொடுக்கவும்.











    பகுதி 2 ற்கான படங்களைக் காண கீழே உள்ள தொடுப்பில் சொடுக்கவும்.

    0 Responses to “தேர்க் கொட்டகைக்கான அடிப்போடல் நிகழ்வு (07.11.2011)”

    Post a Comment

    Related Posts Plugin for WordPress, Blogger...

    Subscribe