Showing posts with label நிகழ்வு. Show all posts
Showing posts with label நிகழ்வு. Show all posts

Saturday, May 21, 2011

6

தேவசாந்தன்,காயத்திரி தம்பதிகளின் திருமணவாழ்த்து.

  • Saturday, May 21, 2011
  • குகரூபன்


  • 22.05.2011 ஞாயிற்றுக்கிழமை அன்று துன்னாலை அல்லையம்பதி வடிவேலர் மணிமண்டபத்தில் நடைபெறும் திருமணத்தை வாழ்த்தும் முகமாக வரையப்பட்ட
    மணமங்கல வாழ்த்து மடல்

    மணமகனே!
    இல்லற வாழ்வில் இனிது புகும் தேவசாந்தனே
    நல்லறமாகவே நடத்திடுவீர் வாழ்வதனை
    சொல்லறம்மிக்க செல்வியாம் காயத்திரியுடன்.
    பல்லறங்கள் செய்து பண்புடனே வாழ்க வாழ்க!
    மணமகளே!
    அன்ன நடையாளே மின்னலிடையாளே பெண்ணே
    சொன்ன சொல் தவறாமல் தேவசாந்தனுடன்
    மன்னவனும் இராணியும் போல் மாண்புடனே வாழ்கவென
    இன்று நாம் வாழ்த்துகின்றோம் இதயங்கனிந்தே!

    மணமக்களே!
    நல்லார் போற்றும் அறிவழகும் நலமார் அன்பும் மிகப்பெற்றே
    எல்லாப் பொருத்தங்களு முடையீர் எழிலார் இன்பத் தம்பதிகாள்!
    வல்லார் சொல்லும் வகை நின்றே வளமார் இல்லற நெறியதனில்
    செல்லும் உங்கள் செயல் கண்டே சிந்தை மிகவும் களிக்கின்றோம்!

    காதல் வாழ்வும் கலையறிவும் கமழப் பெற்றீர் மணமக்காள்!
    மோதும் துன்பம் வந்தாலும் சாதித் தெந்தச் செயலினையும
    சலியா தாற்றி வாழியவே! ஓதும் இறைவன் அருள் வழியால்
    உலகில் என்றும் வாழியவே!

    கண்கள் இரண்டும் ஒன்றினையே காணும் காட்சியது போல
    எண்ணும் நினைவும் சொல் செயலும் இருவர் பாலும் ஒருமித்தே
    பண்ணார் அமுத மொழி பயிலும் பாலர் தம்மைப் பயந்திடுக
    நண்ணும் எல்லா வளமுற்றே நாளும் நலமாய் வாழியவே!

    மணமக்களை எங்கள் ஊர் இலக்கணவத்தை குழும மக்கள் சார்பாகவும் கற்பகத்தான் இணையம் சார்பாகவும் வாழ்த்தி மகிழ்வடைகின்றோம்...

    Post Comment

    Read more...

    Wednesday, May 18, 2011

    4

    ஜெயசீலன் - சுகன்யா தம்பதிகளின் திருமண நிகழ்வு 18/5/2011

  • Wednesday, May 18, 2011
  • சுதா (admin)
  •                     இன்று 18/5/2011 அன்று தாயகத்தில் வாழும் எம் ஊர் உறவான ஜெயசிலனுக்கு பதிவுத்திருமண நிகழ்வு வெகு சிறப்பாக இடம்பெற்றது.

                       
                          இருமனம் பொருந்தும் திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட ஜெயசீலன் - சுகன்யா தம்பதிகளை என்றும் 16 ம் பெற்று சீரும் சிறப்புடனும் வாழ எங்கள் ஊர் இலக்கணவத்தை குழும மக்கள் சார்பாகவும் கற்பகத்தான் இணையம் சார்பாகவும் வாழ்த்தி மகிழ்வடைகின்றோம்...



    Post Comment

    Read more...
    Related Posts Plugin for WordPress, Blogger...

    Subscribe