Tuesday, November 9, 2010
0
எமது கற்பக விநாயகர் ஆலயத்தின் வடக்கு வீதியில் உள்ள கொட்டகையின் ஒரு பகுதியை 2004 ம் ஆண்டு காலப்பகுதியில் சீவரத்தினம் பரமேஸ்வரனால் அமைக்கப்பட்டு தரப்பட்டிருந்தது. அதன் எஞ்சிய பகுதியை நடனகுரு சாமியின் குடும்பத்தாரால் அமைக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது.
வடக்கு வீதி கொட்டகை
அன்பு வணக்கத்திற்குரிய எம் ஊர் உறவுகளே. இந்த வலைத்தளத்தை திரு. தில்லையம்பலம் சுதாகரன் அவர்கள் ஊரின் வரலாற்றுப் பதிவுகளைப் பேணுவதற்காக ஆரம்பித்துள்ளார். நீங்களும் உங்களுக்கு தெரிந்த வரலாற்று விடயங்களை பிரசுரத்திற்கு தகுந்ததாக அவருக்கு அனுப்பி வையுங்கள்.
இனி என் அக்கத்திற்கு வருவோம். இம் முதலாவது ஆக்கத்தை எந்தவித முன்னேற்பாடுமின்றி எழுதுவதால் இதன் கருப் பொருள் ஒரு நடப்பு விசயமாக இருக்கிறது.எமது கற்பக விநாயகர் ஆலயத்தின் வடக்கு வீதியில் உள்ள கொட்டகையின் ஒரு பகுதியை 2004 ம் ஆண்டு காலப்பகுதியில் சீவரத்தினம் பரமேஸ்வரனால் அமைக்கப்பட்டு தரப்பட்டிருந்தது. அதன் எஞ்சிய பகுதியை நடனகுரு சாமியின் குடும்பத்தாரால் அமைக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது.
இன்னும் மேற்கு, தெற்கு வீதிகளுக்கும் கொட்டகைகள் அமைக்க வேண்டிய தேவை இருப்பதுடன் அதற்கான நிலமும் இடப்பட வேண்டும். மொத்தமாக இதற்கு 15 லட்சம் ரூபா தேவைப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தக் கொட்டகை அமைக்கும் பணியில் முற்று முளுதாக ஈடுபட்டு உதவி புரிந்த அனைத்து உள்ளங்களுக்கும். முக்கியமாக எம் ஊர் இளைஞர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.
ஆக்கம் – திரு. மகேந்திரன் (கோயில் தலைவர்)
Subscribe to:
Post Comments (Atom)
0 Responses to “வடக்கு வீதி கொட்டகை”
Post a Comment