Saturday, March 5, 2011

3

மாணவரின் போட்டி முடிவுகளும் / நன்றி கூறலும் / ஒன்று கூடல் நிகழ்வும்.

  • Saturday, March 5, 2011
  • சுதா (admin)
  • Share
  • வணக்கம் உறவுகளே

                இன்று ஒரு உறவுக்கு நன்றி சொல்லும் முகமாகவே இந்தப் பதிவில் சந்தித்துக் கொள்கிறோம். எம் ஊரின் பாடசாலை மாணவர்களை ஊக்குவிக்கும் முகமாக ஒரு உறவுக்காரர் தானாக முன் வந்து நல்லெண்ண அடிப்படையில் ஒரு தொகைப் பணத்தை தந்திருந்தார். அதனடிப்படையில் மாணவரிடையே ஊக்கப்படுத்தும் முகமாக பரீட்சை ஒன்றை நானும் , ஜெயசீலனும் இணைந்து முன்னெடுத்தோம்.இதற்கு ஆசிரியர்களானா சசிக்குமார். சுதேசினி, விமலா, நளினி போன்றோர் முழு ஒத்துழைப்பும் வழங்கி பரீட்சை தாள்களை ஒழுங்கமைத்து சிறப்புற முடித்துத் தந்தார்கள். அத்துடன் பங்கு பற்றிய 38 மாணவர்களும் நாம் எதிர் பார்த்ததை விட சிறப்பாகவே பெறு பேறுகளை பெற்றுத் தந்தார்கள்.


             ஆரம்ப போட்டியாகையால் மாணவரிடையே ஒரு ஊக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக சம அடிப்படையிலேயெ பரிசு வழங்கப்பட்டது. பரிசு வழங்கல் நிகழ்வு திருவிழாவை அண்டி ஒழுங்கமைக்கப்பட்டாலும் நேர ஒழங்கமைப்பில் எற்பட்ட தடங்கல் காரணமாக பிற்போடப்பட்டது அனால் மாணவர்களின் ஒன்று கூடல் தடங்கலால் சனசமூக நிலையத்திலேயே சாதாரணமாக நிகழ்வை நிகழ்த்து முடிக்க வேண்டிய துர்பாக்கிய நிலை எற்பட்டாலும் யாருடைய மனமும் கோணாமல் சிறப்பாகவே நிகழ்த்தி முடிக்ககக் கூடியதாக இருந்தது.
            சரி இந்தளவும் சொல்லி விட்டு அந்த உறவை சுட்டிக்காட்டாமல் போகலாமா ? அவர் வேறுயாருமல்ல ”எங்க ஊர் இலக்கணாவத்தை” முகப்புத்தகத்தை உருவாக்கி எம் உறவுகள் பலரை ஒருங்கிணைத்து வைத்திருக்கும் திரு. மு. லிங்கம் தான் அந்த நன்றிக்குரியவர்.. இந்த இடத்தில் அவருக்கு நன்றி கூறிக் கொள்வதுடன்.. நாளை காலை 11 மணிக்கு கனடாவில் எமது உறவுகள் அனைவரும் ஒன்று கூட உள்ளார்கள். ஆர்வமுடைய அனைவரும் அந்த நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்கலாம். இத்தகவலை எம் ஊர் ஒன்றியம் சற்று முன்னர் உத்தியோகபூர்வமாக தெரிவித்திருந்தது.. மேலதிக விபரங்களுக்கு ஒன்றியத் தலைவர் திரு.மு. லிங்கத்துடன் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளுங்கள்

    3 Responses to “மாணவரின் போட்டி முடிவுகளும் / நன்றி கூறலும் / ஒன்று கூடல் நிகழ்வும்.”

    ம.தி.சுதா said...
    March 5, 2011 at 8:53 PM

    முடிந்தால் இத்தகவலை அனைவருக்கும் பகிருங்கள்...


    மு.லிங்கம் said...
    March 6, 2011 at 1:42 AM

    இந்த போட்டியில் பங்குபற்றிய அனைத்து உறவுகளிற்கும் பாராட்டுக்களையும், இதை முன்னின்று நடாத்திய உறவுகளிற்கும், ஆசிரியர்களிற்கும் "இலக்கணாவத்தை மக்கள் ஒன்றியம் கனடா" சார்பிலும், " எங்க ஊர் இலக்கணாவத்தை" முகநூல் உறவுகள் சார்பிலும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

    முக்கியமாக இதில் ஒரு திருத்தம் என்னவெனில் நாளை ஞாயிற்றுக்கிழமை 11மணியளவில் " இலக்கணாவத்தை மக்கள் ஒன்றியம்" நிர்வாகக்கூட்டம் தான் இடம்பெறவுள்ளதே ஒழிய ஒன்றுகூடல் அல்ல என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.
    நன்றி,
    மு.லிங்கம்.


    அன்பு நண்பன் said...
    March 6, 2011 at 6:49 AM

    சகோதரா உங்கள் முயற்சி எவ்வளவு தூரம் மாணவர்களிடையே வரவேற்பு, எதிர்பார்பை ஏற்படுத்தயுள்ளது என்பதை நேரில் உணரமுடிந்தது, நம் ஊரின் எதிர்கால சமூகத்தை வளம்படுத்த இந்த முயற்சி சிறந்த ஆரோக்கியமான ஒன்று,, இந்த முயற்சி வெற்றிப்பாதையில் தொடர அனைவரும் உதவினால் மேலும் பலனை தரும்


    Post a Comment

    Related Posts Plugin for WordPress, Blogger...

    Subscribe